வீட்டின் முன் திரண்ட ரசிகர்கள் - கையசைத்து உற்சாகப்படுத்திய ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்தின் திருமண நாளை முன்னிட்டு, சென்னை போயஸ்கார்டனில் உள்ள அவரது இல்லம் முன்பு ரசிகர்கள் திரண்டனர்.
x
நடிகர் ரஜினிகாந்தின் திருமண நாளை முன்னிட்டு, சென்னை போயஸ்கார்டனில் உள்ள அவரது இல்லம் முன்பு ரசிகர்கள் திரண்டனர். ரஜினிகாந்த் இன்று தனது 41வது திருமண நாளைக் கொண்டாடி வருகிறார். இதையடுத்து ரஜினிகாந்த் - லதா தம்பதியினருக்கு திரையுலகினர், ரசிகர்கள் எனப் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ரஜினிகாந்தை பார்க்க அவரது இல்லம் முன்பு ஏராளமான ரசிகர்கள் திரண்டனர். அவர்களை பார்த்த நடிகர் ரஜினிகாந்த், கையசைத்து உற்சாகப்படுத்தினார். இதனால் மகிழ்ச்சியடைந்த ரசிகர்கள், ஆரவாரம் செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்