ஆர்யன் கான் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை - மும்பை நீதிமன்ற ஜாமின் நகலில் தகவல்
போதை பொருள் பயன்படுத்தியதாக ஆர்யன் கான் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லையென மும்பை நீதிமன்றம் ஜாமின் உத்தரவில் தெரிவித்துள்ளது.
நடிகர் ஷாருக் கான் மகன் ஆர்யன் கான் கடந்த மாதம் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யபட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனையடுத்து கடந்த மாதம் 29-ம் தேதி மும்பை உயர் நீதிமன்றத்தால் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
உயர் நீதிமன்றம் வழங்கிய ஜாமீன் உத்தரவு நகல் தற்போது வெளியாகி உள்ளது. அதில் ஆர்யன் கான், அர்பாஸ் மெர்ச்சண்ட், முன்முன், தமாசா ஆகியோர் போதைப்பொருள் தொடர்பான சதியில் ஈடுபட்டதற்கான எந்த வித ஆதாரமும் இல்லை என்று தீர்ப்பு நகலில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் மூன்று பேரும் கப்பலில் பயணம் செய்தனர் என்பதற்காக அவர்கள் போதைப்பொருள் சதியில் ஈடுபட்டதாக கருதிவிட முடியாது என்றும் தெரிவித்துள்ளது. விசாரணை அதிகாரி பதிவு செய்ததாக கூறப்படும் ஒப்புதல் வாக்குமூலம் ஜாமீன் மனு மீதான விசாரணையின் போது இணைக்கப்படவில்லை என்பதால் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அறிக்கையை நம்ப முடியாது என்றும் நீதிபதி தனது ஜாமீன் உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
Next Story