யார் இந்த மீரா மிதுன்? - தென்னிந்திய அழகி To சர்ச்சைகளின் ராணி
தென்னிந்திய அழகியாக இருந்த நடிகை மீரா மிதுன், சர்ச்சைகளில் சிக்கி கைதாகி இருக்கிறார்.
தென்னிந்திய அழகியாக இருந்த நடிகை மீரா மிதுன், சர்ச்சைகளில் சிக்கி கைதாகி இருக்கிறார்.... யார் இவர்? இவரின் பின்னணி என்ன? இப்போது பார்க்கலாம்...தமிழ்செல்வி என்ற பெயர் தான் இவரின் முதல் அடையாளம். சென்னையில் பள்ளி, கல்லூரி படிப்பை முடித்து விட்டு தன் கவனத்தை மாடலிங் துறை பக்கம் திருப்பினார்.2013ல் மாடலிங்கால் சில வாய்ப்புகளை பெற்ற அவர், பல்வேறு நிறுவனங்களில் மாடலாகவும் வந்தார். டிவி நிகழ்ச்சிகளில் தலை காட்டிய அவர் மீரா மிதுன் என தன் பெயரை மாற்றிக் கொண்டார். இந்த சூழலில் 2016ல் நடந்த தென்னிந்திய அழகிப் போட்டியில் கலந்து கொண்ட அவருக்கு முதலிடமும் கிடைத்தது. அப்போது இந்த போட்டியில் 2ஆம் இடம் பிடித்தவர் நடிகை சனம் ஷெட்டி. இதன்பிறகு பல அழகி போட்டிகளிலும் கலந்து கொண்டார் மீரா மிதுன். தனக்கு கிடைத்த பாப்புலாரிட்டியை வைத்துக் கொண்டு தன்னுடைய தலைமையில் மாடலிங் நிகழ்ச்சி ஒன்றை நடத்த திட்டமிட்டார் மீரா மிதுன். அப்போது அந்த நிகழ்வை நடத்த சிலர் தடை செய்வதாக 2019ல் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார் அவர்...இதனால் அதிர்ந்து போன நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், முறைகேடாக செயல்பட்டதாக கூறி மீரா மிதுனின் தென்னிந்திய அழகி பட்டத்தை பறித்தனர். இதன்பிறகு அந்த பட்டம் 2ஆம் இடத்தை பிடித்த சனம் ஷெட்டிக்கு சென்றது. இதன் பிறகு யூட்யூபில் பல்வேறு வீடியோக்களை பதிவிடுவதும், சர்ச்சையாக பேசுவதும் அவரின் வழக்கமாக இருந்தது. நடிகர்கள் விஜய், சூர்யா, த்ரிஷா, ஜோதிகா உள்ளிட்டோர் குறித்து அவதூறாக பேசி அவரின் ரசிகர்களிடம் வசவுகளை வாங்கி கட்டிக் கொண்டார் அவர்..இதனிடையே நடிகர் சூர்யா நடித்த தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட சில படங்களிலும் நடித்தார் மீரா மிதுன்.இதன்பிறகு தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு அங்கும் சண்டை சச்சரவுகளால் ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்து உடனடியாக வெளியேறினார். பின்னர் அரைகுறையான உடைகளுடன் ஆபாசமாக பேசுவது, தன்னுடைய பாய் பிரெண்டுடன் அந்தரங்கமான படங்களை எடுத்து பதிவேற்றுவது என இருந்து வந்தார் மீரா மிதுன்...அவரின் சர்ச்சையான பேச்சுகளே திரைத்துரையில் அவருக்கு கிடைத்த பல வாய்ப்புகளை தட்டிப் பறித்தது. இந்த நிலையில் தான் பட்டியலின இயக்குநர்கள் பற்றி அவதூறாக பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டார். அவரின் பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீரா மிதுன் மீது போலீசில் புகார் அளித்தனர். இதன்பேரில் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பான விசாரணைக்காக 11ஆம் தேதி ஆஜராகுமாறு உத்தரவிட்டும் மீரா மிதுன் வரவேயில்லை.அப்போதும் கூட, தான் பேசியதில் என்ன தவறு இருக்கிறது? என கேள்வி எழுப்பிய மீரா, தன்னை கைது செய்வது கனவிலும் நடக்காது என்றார். சினிமாவில் தமிழ் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்றும் சரமாரி குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். இந்த நிலையில் தான் கேரளாவில் இருந்த மீரா மிதுன் கைது செய்யப்பட்டிருக்கிறார். போலீசார் அவரை கைது செய்ய சென்ற போது கத்தி கூச்சலிட்டு, போலீசார் தன்னை துன்புறுத்துவதாகவும், தற்கொலை செய்து கொள்வேன் என்றும் மிரட்டல் விடுத்தார்...தென்னிந்திய அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர் தன் பாதையை மாற்றிக் கொண்டது அவரை இப்போது கைது வரை கொண்டு சென்றிருக்கிறது....
Next Story