திரையுலகில் 30வது ஆண்டில் தல அஜித் : "ரசிகர்கள் அன்பை ஏற்றுக்கொள்கிறேன்" - நன்றி தெரிவித்த நடிகர் அஜித்குமார்
திரையுலகில் 30வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நடிகர் அஜித்குமார், திரை வாழ்க்கையில் அனைவரது கருத்தையும் ஏற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளார். அவரது திரைப்பயணம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு
அஜித்குமார்...
எண்ணற்ற தமிழக இளைஞர்களின் ஆதர்ச திரை நட்சத்திரம்...
1990ஆம் ஆண்டு பள்ளி மாணவனாக திரையில் தோன்றியிருந்தாலும், 1992ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3ம் தேதி பிரேம புஸ்தகம் என்ற தெலுங்கு படத்தில் கதாநாயகனாக நடிக்க தொடங்கினார்.
29 ஆண்டுகள் ஓடிவிட்டன. தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் அந்தஸ்துக்கு உயர்ந்துள்ள அஜித்குமார், 30வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நேரத்தில், வலிமை என்ற படைப்பை கொடுக்க தயாராகிவிட்டார்
இவரது 30 ஆண்டு பயணத்தை கொண்டாடும் விதமாக வேற மாதிரி என்ற பாடலை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தியது வலிமை படக்குழு.அமர்க்களம் தொடங்கி, தீனா, பில்லா, மங்காத்தா, வேதாளம் போன்ற படங்களால் கொண்டாட வைத்தார். ஏன் ஒருபடி மேலே சொன்னால் தல தல என வெறிபிடிக்க வைத்தார்.
இதில் சில ரசிகர்கள் விரும்பத்தகாத செயலில் ஈடுபட, ரசிகர் மன்றத்தை கலைத்தார். ஆனால் இந்த முடிவு அஜித்தின் ரசிகர் பலத்திற்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.. இன்னமும் அதிகரிக்கவே வைத்தது.
சினிமா மட்டுமல்ல, கார் ரேஸ், பைக் ஆர்வம், ட்ரோன் ஆராய்ச்சி, துப்பாக்கி சுடுதல் பயிற்சி போன்றவற்றாலும் ரசிகர்களை கவர்ந்தார்.
இப்போது 30 ஆண்டுகால திரைப்பயணத்தை நினைவுகூர்ந்து செய்தி வெளியிட்டுள்ள அஜித் குமார், ரசிகர்கள், வெறுப்பவர்கள், நடுநிலையாளர்கள் நாணயத்தின் மூன்று பக்கம் போன்றவர்கள்..
ரசிகர்களின் அன்பையும், வெறுப்பாளர்களின் வெறுப்பையும் நடுநிலையாளர்களின் கருத்துக்களையும் அன்போடு ஏற்றுக்கொள்கிறேன். வாழு, வாழவிடு! என நன்றி தெரிவித்தார்.
நிபந்தனையில்லாத அன்பு எப்போதும்!!" எனக்கூறி அன்பையும் பகிர்ந்து எப்போதும் போல அமைதியாகிவிட்டார் அஜித்
தீனா படத்தில் அஜித்தை பார்த்து தல இருக்கும் போது வால் ஆடக்கூடாது என மகாநதி சங்கர் ஒரு வசனம் பேசுவார். இந்த வசனம் தான் அஜித்தையும் அவரது ரசிகர்களையும் இணைக்கும் மந்திரம். அன்று முதல் இனி எப்போதும் தல தான் ரசிகர்களுக்கு...அஜித்தின் திரைப்பயணத்தில் காதல் கோட்டை, காதல் மன்னன், அவள் வருவாளா படங்கள் மூலம் ரசிகர்களை கவனிக்க வைத்தார். ரசிக்க வைத்தார்..
Next Story