சொகுசு கார் நுழைவு வரி விவகாரம்... நடிகர் விஜய் தரப்பு கோரிக்கை ஏற்பு

சொகுசு கார் நுழைவு வரி விவகாரம்... நடிகர் விஜய் தரப்பு கோரிக்கை ஏற்பு
சொகுசு கார் நுழைவு வரி விவகாரம்... நடிகர் விஜய் தரப்பு கோரிக்கை ஏற்பு
x
சொகுசு கார் நுழைவு வரி விவகாரம்... நடிகர் விஜய் தரப்பு கோரிக்கை ஏற்பு

சொகுசு கார் நுழைவு வரி தொடர்பாக நடிகர் விஜய் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை, விசாரணைக்கு பட்டியலிட சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு காருக்கு நுழைவு வரி விதிக்கத் தடை கோரி நடிகர் விஜய் தாக்கல் செய்த வழக்கை அபராதத்துடன் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில், தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து நடிகர் விஜய் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார். தனி நீதிபதி உத்தரவின் சான்றளிக்கப்பட்ட நகல்  இல்லாமல், மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொள்ள அனுமதி கேட்டு தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணைக்கு வந்தது. நடிகர் விஜய் தரப்பு கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், தனி நீதிபதி உத்தரவின் சான்றளிக்கப்பட்ட நகல் இல்லாமல் விசாரணைக்கு பட்டியலிட பதிவுத்துறைக்கு உத்தரவிட்டனர். இரு வாரங்களில் அபராதம் செலுத்த தனி நீதிபதி உத்தரவிட்டுள்ளதால், இந்த மேல் முறையீட்டு வழக்கை திங்கள் கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று விஜய் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதற்கு, வழக்கு முதலில் பட்டியலிடப்பட வேண்டும் எனவும், அதன் பிறகு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்