"மாஸ்டர்" படக்குழுவின் "மாஸ்டர்" பிளான் - கதை திருட்டு சர்ச்சையை தவிர்க்க புதிய திட்டம்
கதை திருட்டு சர்ச்சையை தவிர்க்க "மாஸ்டர்" படக்குழு மாஸ்டர் பிளான் போட்டுள்ளது, இதைப்பற்றி அலசுகிறது இந்த செய்தி தொகுப்பு...
மாஸ் ஹீரோவான விஜயின் படம் ஏதாவது ஒரு பிரச்சினையில் சிக்காமல் வெளிவந்தால் அது சாதனையாக பார்க்கப்படும் என்ற நிலை தற்போது உள்ளது,.
அது விளம்பர நோக்கத்திற்காகவும் வசூலை மையமாக வைத்தும் செய்யப்படும் உல்டா வேலை என்று சினிமா விமர்சகர்கள் போல சாதாரணமாக சொல்லிவிட்டு நகர்ந்து செல்ல முடியாது,..
விஜய் நடிப்பில் வெளியான தலைவா படம் அரசியல் பிரச்சினையில் சிக்கி பெரும் சிரமத்திற்கு இடையே திரையிடப்பட்டது,. அதேபோல் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த "கத்தி "திரைப்படத்தின் கதை இன்னொரு நபருடையது என்ற சர்ச்சை எளிதில் அடங்கவில்லை,.
அத்போல் அட்லி இயக்கத்தில் வெளிவந்த 'தெறி'' மெர்சல்' போன்ற படங்களும் கதை "ஜெராக்ஸ்" சர்ச்சையில் சிக்கின,.
தெறி படம் விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்த சத்ரியன் படத்தின் சாயல் இருப்பதாகவும், மெர்சல் திரைப்படம் கமல்ஹாசன் நடித்தஅபூர்வ சகோதரர்கள் ரஜினி நடித்த மூன்று முகம் போன்ற படங்களின் காப்பி போல் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தன
இந்த நிலையில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆன்ட்ரியா, சாந்தனு உள்ளிட்டோர் நடித்திருக்கும் 'மாஸ்டர்' திரைப்படம்
பொங்கல் பண்டிகைக்கு உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.
Next Story