"சினிமா பிரபலங்களை, வீட்டிலேயே முடக்கி போட்ட கொரோனா" - கடந்த 4 மாதங்களாக நடிகர்களின் பொழுது போக்கு என்ன,,?

கொரோனா ஊரடங்கு, கடந்த 4 மாதங்களாக சினிமா பிரபலங்களை, வீட்டிலேயே முடக்கி போட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் அவர்கள் என்ன செய்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதை தற்போது பார்க்கலாம்.
சினிமா  பிரபலங்களை, வீட்டிலேயே முடக்கி போட்ட கொரோனா - கடந்த 4 மாதங்களாக நடிகர்களின் பொழுது போக்கு என்ன,,?
x
படபிடிப்பு, படம் வெளியீடு, திரைப்படப்பணிகள் என எப்போதும் பரபரப்பாக இருக்கும் முன்னணி நடிகர்களை, வீட்டிலேயே முடக்கி போட்டுள்ளது இந்த கொரோனா.

ரஜினி,கமல், விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் தற்போது என்ன செய்வார்கள் என எதிர்பார்ப்பு அவர்களது ரசிகர்கள் மட்டுமல்லாது, அனைவருக்கும் இருக்கிறது. இந்த நிலையில் ரஜினி, ஊரடங்கு காலத்தில் என்ன செய்கிறார் என அவருக்கு நெருக்கமானவர்களிடம் கேட்டோம். அப்போது, 
ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பிறகு கடந்த மாதம் வரை ரஜினி, தினமும் தனது கேளம்பாக்கம் பண்ணை வீட்டுக்கு சென்று வந்து கொண்டிருந்தார்.போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டிலிருந்து காலை 11 மணிக்கு புறப்பட்டு அவர், கேளம்பாக்கம் பண்ணை வீட்டிற்குச் செல்வார். அங்கு மதிய உணவு சாப்பிடுபவர்.மாலை 4 மணி வரை உலக அளவில் புகழ் பெற்ற புத்தகங்களை வாசிப்பார். மாலையில் பண்ணையை சுற்றி நடைப்பயிற்சி, அதன் பிறகு அரை மணி நேரம் தியானம், இதனையடுத்து மூச்சு பயிற்சி எடுத்துக் கொள்கிறார் ரஜினி.  அதனையடுத்து, குளிர்ந்த நீரில் குளித்து முடித்து விட்டு, இரவு 7 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு போயஸ் கார்டன் இல்லத்திற்கு வந்து விடுகிறார்.

நடிகர் கமல்ஹாசன் இந்த ஊரடங்கால், சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் சொகுசு ஓட்டலில் தங்கி இருக்கிறார். அங்கு இருந்தபடியே கட்சிப் பணிகள் தேங்கி விடாதபடி, வீடியோ கான்பரன்ஸ் முறையில் நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தி வருகிறார். கமல் தற்போது தங்கியிருக்கும் தனியார் ஓட்டல், வீடு போன்று வசதியாக உள்ளதால், இங்கு இருந்துகொண்டு டுவிட்டரில் அரசியல் அறிக்கைகளையும் கருத்துக்களையும் வெளியிட்டு வருகிறார்.

நடிகர் விஜய் சென்னை ஈ.சி.ஆரில் உள்ள வீட்டில் தங்கி வருகிறார். மனைவியுடன் நேரத்தை செலவு செய்து வரும் விஜய், தன்னுடைய நண்பர்களுடன் அடிக்கடி போனில் பேசி வருகிறார்.  சில தினங்களுக்கு முன்பு மாஸ்டர் படத்தின் கதாநாயகி மாளவிகா மோகனன் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோருடன் வீடியோ காலில் பேசின புகைப்படங்கள் வெளியானது . ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் அடிக்கடி பேசி வரும் விஜய், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் செய்து வருகிறார்.

நடிகர் தனுஷ், தன்னுடைய குடும்பத்தினருடன் நேரத்தை கழித்து வருகிறார். 
அடிக்கடி ரசிகர்களை சந்திக்கும் விஜய் சேதுபதி ஊரடங்கு நேரத்தில் யாரையும் சந்திப்பது இல்லை.

சில வாரங்களுக்கு முன்பு புகைப்படக்கலைஞர் ராமச்சந்திரன் விஜய் சேதுபதியை வைத்து ஒரு போட்டோ ஷுட் நடத்தினார். இந்த புகைப்படங்களும் வீடியோக்களும் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலானது.

ஊரடங்கால் படப்பிடிப்பு இல்லாததால் சிவகார்த்திகேயன் தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் நேரத்தை செலவழித்து வருகிறார் 
இந்த கால கட்டத்தில், சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தின் செல்லம்மா என்ற பாடல் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலானது. 

Next Story

மேலும் செய்திகள்