தோனி வாழ்க்கை வரலாறு படத்தில் ஹீரோவாக நடித்த நடிகர் சுஷாந்த் சிங் மன அழுத்தம் காரணமாக தற்கொலை
தோனி வாழ்க்கை வரலாறு படத்தில் ஹீரோவாக நடித்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டார். அவரின் வயது 34.
பீகார் மாநிலம் பாட்னாவில் பிறந்து வளர்ந்த சுஷாந்த் சிங், பொறியியல் பட்டதாரி ஆவார். இளவயதிலேயே படிப்பில் சுட்டியான சுஷாந்த், சீரியல் நடிகராக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். பின்னர் பிரபல எழுத்தாளர் சேத்தன் பகத்தின் நாவலை மையமாக கொண்டு உருவான கை போ சே(Kai po Che) என்ற படத்தின் மூலம் இந்தி பட உலகில் நடிகராக அறிமுகமானார். பின்னர் பீ.கே.(PK), கேதார்நாத், ட்ரைவ் உள்ளிட்ட படங்களில் நடித்தார். கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு இயக்கப்பட்ட படத்தில் தோனியாக நடித்து ரசிகர்களின் கவனத்தை பெற்றார் சுஷாந்த். விருதுகள் ஒரு பக்கம், அடுத்தடுத்த படங்கள் என இருந்த நிலையில் திடீரென மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். கடந்த சில தினங்களுக்கு முன்பாக சுஷாந்தின் மேலாளராக இருந்த திஷா ஷாலியன் என்ற பெண் தற்கொலை செய்து கொண்ட நிலையில் திடீரென சுஷாந்தும் மரணமடைந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
Next Story