சின்னத்திரை தயாரிப்பாளர்கள் படப்பிடிப்பு நடத்த அனுமதி - நிபந்தனைகளை விதித்து தமிழக அரசு உத்தரவு
சின்னத்திரை தயாரிப்பாளர்கள் படப்பிடிப்பு நடத்திகொள்ள, நிபந்தனைகளுடன், தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
சின்னத்திரை தயாரிப்பாளர்கள் படப்பிடிப்பு நடத்திகொள்ள, நிபந்தனைகளுடன், தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இது குறித்து தமிழக அரசு விடுத்துள்ள அறிக்கையில், சுற்றுச்சுவர் உள்ள வீடுகள் மற்றும் உள் அரங்குகளில் மட்டுமே படப்பிடிப்பு நடத்த வேண்டும் என்றும், கொரோனா கட்டுப்பாட்டு பகுதிக்குள் நடத்த கூடாது என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் படப்பிடிப்பு நடத்த கூடாது என்றும், பார்வையாளர்களுக்கு கண்டிப்பாக அனுமதி இல்லை என்றும், அரசு விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது. படப்பிடிப்பு நடத்தும் இடத்தில் கிருமி நாசினி தெளிக்க வேண்டும், அனைவரும் முக கவசம், சமூக இடைவெளியை கடை பிடிக்க வேண்டும் என்றும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. அவ்வப்போது கைகளை சானிடைசர், சோப் போட்டு கழுவ வேண்டும் என்றும் தமிழக அரசு சின்னத்திரை தயாரிப்பாளர்களுக்கு நிபந்தனை விதித்துள்ளது.
Next Story