இந்தியன்-2 படப்பிடிப்பு விபத்து : கமல்,சங்கருக்கு சம்மன் அனுப்ப முடிவு
இந்தியன்-2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து தொடர்பாக நடிகர் கமல் மற்றும் இயக்குனர் சங்கருக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
இந்தியன்-2 படப்பிடிப்பு விபத்து குறித்து விசாரணை வரம்பை நசரத்பேட்டை போலீசார் விரிவுப்படுத்தியுள்ளனர். அதன்படி, படப்பிடிப்பு தளத்தில் இருந்த நடிகர் கமல், இயக்குநர் சங்கருக்கு சம்மன் அனுப்ப முடிவு செய்துள்ளனர். விபத்து எப்படி நடந்தது? ஊழியர்களுக்கு ஏன் காப்பீடு எடுக்கவில்லை? உரிய பாதுகாப்பு அனுமதி பெறப்பட்டதா? உள்ளிட்ட கேள்விகளை போலீசார் தயார் செய்துள்ளனர். மேலும், விபத்தில் காயம் அடைந்தவர்களையும் தனித்தனியாக விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதனிடையே, லைக்கா நிறுவனம், பட தயாரிப்பு மேலாளர் மற்றும் கிரேன் உரிமையாளர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் நசரத்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள கிரேன் ஆப்ரேட்டர் ராஜனை போலீசார் தேடி வருகின்றனர்.
Next Story