ஏ.ஆர். ரகுமானின் திரையிசை வெற்றிப் பயணம்

இந்திய இசையை சர்வதேச அளவில் எடுத்துச்சென்ற பெருமைக்குரிய இசைப்புயல் ஏ.ஆர். ரகுமானின் பிறந்த நாள் ஜனவரி 6.
ஏ.ஆர். ரகுமானின் திரையிசை வெற்றிப் பயணம்
x
1992 ஆம் ஆண்டு இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா திரைப்படத்தின் மூலமாக திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமானார்.இளையராஜாவின் ஆதிக்கம் மிகுந்திருந்த காலத்தில்முதல் திரைப்படத்திலேயே இசையில் தனிமுத்திரை பதித்து, தேசிய விருது பெற்றார். அதன் பிறகு மின்சார கனவு, லகான், கன்னத்தில் முத்தமிட்டால், உள்ளிட்ட படங்களுக்கும் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதினைப் பெற்றார்.

1997 ஆம் ஆண்டு இந்தியாவின் 50 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, ரஹ்மான் வெளியிட்ட வந்தே மாதரம் ஆல்பம் பாடல்கள் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. சங்கரின் ஜெண்டில்மேன், காதலன், இந்தியன், ஜீன்ஸ், முதல்வன், பாய்ஸ், சிவாஜி, எந்திரன் உள்ளிட்ட படங்களில், ஏ.ஆர்.ரகுமானின் இசை மிகுந்த வரவேற்பைப் பெற்றது.இதுவரை 4 தேசிய விருதுகள் பெற்றிருக்கிறார். வாலி, வைரமுத்து, குல்ஸார் உள்ளிட்ட முன்னணி பாடலாசிரியர்கள் அனைவருடனும் பணியாற்றியிருக்கிறார். 2008 ஆம் ஆண்டு ஸ்லாம் டாக் மில்லினர் திரைப்படத்திற்காக, கோல்டன் குளோப், கிராமி விருது மற்றும் இரண்டு ஆஸ்கர் விருதுகள் கிடைத்தது. ஆஸ்கர் நாயகனை உலகமே கொண்டாடியது.

அதிலும், தமிழ் திரையுலகைச் சேர்ந்த ஒருவருக்கு ஆஸ்கர் கிடைத்ததை இந்திய திரையுலகமே வியந்து பார்த்தது. விருதினைப் பெற்றபோது கூட " எல்லாப் புகழும் இறைவனுக்கே" என்று தமிழில்பேசி, தமிழர்களின் பெருமையை தலைநிமிரச்செய்தார்.2010 ல் ரகுமான் இசையமைத்த விண்ணைத்தாண்டி வருவாயா பாடல்கள் சூப்பர்ஹிட் ஆனது.2012 ஆம் ஆண்டு டிசம்பரில்ஆங்கிலத்திலும் இந்தியிலும் வெளியிட்ட இன்ஃபினிட் லவ் இசை ஆல்பமும், பெரிதும் கொண்டாடப்பட்டது.
2016 சுதந்திரதினத்தையொட்டி, நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. பொதுச்சபை அரங்கில் ஏ.ஆர்.ரகுமானின் இசைநிகழ்ச்சி நடந்தது. கர்நாடக இசைமேதை எம்.எஸ்.சுப்புலட்சுமிக்குப் பிறகு ஐ.நா வில் இசைநிகழ்ச்சி நடத்திய பெருமை ஏ.ஆர். ரகுமானையே சாரும்.

2016-இல் மெர்சல் திரைப்படம், பல விருதுகளை வென்றது.2018-ல் செக்கச்சிவந்த வானம், மற்றும் அதை தொடர்ந்து 2.0, சர்கார் ஆகிய படங்களுக்கு இசை அமைத்தார்.கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி விஜய் நடிப்பில் 2019 ல் வெளியான பிகில் திரைப்படத்திற்கு இசையமைத்ததுடன், சிங்கப்பெண்ணே பாடலையும் பாடியது, சாதிக்கத்துடிக்கும் பெண்களுக்கு தேசியகீதமாய் அமைந்தது.

இன்று, உலகமே கொண்டாடும் ஏ.ஆர். ரகுமான் தனது இளமைக்காலத்தில் கூச்ச சுபாவம் அதிகம் உடையவராம். சிறுவயதில், இசை நிகழ்ச்சிகள், திரைப்பட விழாக்கள் என எங்கு சென்றாலும், அவருக்கு துணையாக அவரது அம்மாதான் இருந்திருக்கிறார். இசைத்துறையில், ரஹ்மான் இந்தளவிற்கு சாதித்திருப்பதில் அவரது அம்மாவின் பங்களிப்பு அளவிடமுடியாதது. ஆரம்ப காலங்களில் பத்திரிக்கை பேட்டிகளுக்குக்கூட, பேசுவதற்கு மிகவும் கூச்சப்பட்டு, தன் அம்மாவும் அருகிலேயே இருக்க வேண்டும் என்ற அம்மா பிள்ளை ரஹ்மான்தான்
ஆஸ்கர் வரை சென்று உலக அரங்கில் தமிழரின் பெருமையை தலைநிமிரச் செய்தார் என்பது காலத்தின் விசித்திரம்.







Next Story

மேலும் செய்திகள்