வரி செலுத்தாதது குறித்து வருமான வரித்துறை தொடந்த வழக்கில் நேரில் ஆஜராக நடிகர் விஷாலுக்கு நீதிமன்றம் உத்தரவு
வரி செலுத்தாதது குறித்து வருமான வரித்துறை தொடந்த வழக்கில், நேரில் ஆஜராக நடிகர் விஷாலுக்கு எழும்பூர் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
வரி செலுத்தாதது குறித்து வருமான வரித்துறை தொடந்த வழக்கில், நேரில் ஆஜராக நடிகர் விஷாலுக்கு எழும்பூர் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு வழங்கிய பணத்திற்காக பிடித்தம் செய்த வரியை வருமான வரித்துறைக்கு குறிப்பிட்ட காலத்துக்குள் செலுத்தவில்லை என கூறப்படுகிறது. இது தொடர்பாக அனுப்பபட்ட நோட்டீசுக்கும் அவர் விளக்கம் அளிக்காததால்,வருமான வரித்துறை சார்பில் எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், வருகிற இரண்டாம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க நடிகர் விஷாலுக்கு சம்மன் அனுப்பி உத்தரவிட்டது.ஏற்கனவே ரூ.1 கோடி வரை சேவை வரி செலுத்தவில்லை என சேவை வரித்துறை நடிகர் விஷால் மீது எழும்பூர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story