நடிகர் சங்க தேர்தல் : பாக்கியராஜ் தலைமையிலான அணி கமலுடன் சந்திப்பு
நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடும் பாக்கியராஜ் தலைமையிலான அணியினர் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனை சந்தித்து ஆதரவு கோரினார்.
நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடும் பாக்கியராஜ் தலைமையிலான அணியினர் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனை சந்தித்து ஆதரவு கோரினார். சென்னை ஆழ்வார்பேட்டையில் நடைபெற்ற சந்திப்பின் போது ஐசரி கணேஸ், பிரசாந்த், ஸ்ரீகாந்த், ஷ்யாம், நிதின் சத்யா, ரமேஷ் கண்ணா உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பாக்கியராஜ், நடிகர் சங்க கட்டிடம் நல்லபடியாக வர வேண்டும் என்பதில் கமல் மிகுந்த ஆர்வமாக உள்ளதாக தெரிவித்தார். இதேபோல் எந்த வித நிதி திரட்டலும் இல்லாமல் நடிகர் சங்க கட்டிடம் 6 மாதங்களில் கட்டி முடிக்கப்படும் என ஐசரி கணேஷ் கூறினார். சுவாமி சங்கரதாஸ் அணியின் தேர்தல் அறிக்கையைவும் அப்போது வெளியிட்டனர்.
Next Story