தியேட்டர் வசூல் பங்கு தொகை பிரிக்கும் விவகாரம் : ரஜினி, விஜய், அஜித் படங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்

தியேட்டர் வசூல் பங்கு தொகை பிரிப்பதில், ரஜினி, விஜய், அஜித் படங்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதிக்க திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.
தியேட்டர் வசூல் பங்கு தொகை பிரிக்கும் விவகாரம் : ரஜினி, விஜய், அஜித் படங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்
x
தியேட்டர் வசூல் பங்கு தொகை பிரிப்பதில், ரஜினி, விஜய், அஜித் படங்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதிக்க திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது. அதன்படி, ரஜினி, விஜய், அஜித் படங்களுக்கு முதல் வாரத்தில் ஏ சென்டரில் 60 சதவீதம் தொகையும், மற்ற சென்டரில் 65 சதவீத தொகையும், விநியோகஸ்தர்களுக்கு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளனர். சூர்யா, ஜெயம்ரவி, தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி ஆகியோரின் படங்களுக்கு முதல் வாரத்தில் ஏ சென்டரில் 55 சதவீதம் தொகையும், மற்ற சென்டரில் 60 சதவீதம் தொகையும் வழங்கப்படும். இவர்கள் தவிர மற்ற நடிகர்கள் படங்களுக்கு அனைத்து சென்டர்களிலும் 50 சதவீதம் தொகையும், இரண்டாவது வாரத்தில் 45 சதவீதம் தொகையும் வழங்கப்படும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்