தண்ணீர் நிறைய குடிங்க : சமந்தா அட்வைஸ்
நடிகை சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கில் அதிக படங்களை கைவசம் வைத்து, முன்னணி நாயகியாக வலம் வருகிறார்.
திருமணத்திற்கு பிறகும் நடிகை சமந்தா, தமிழ் மற்றும் தெலுங் கில் அதிக படங்களை கைவசம் வைத்து, முன்னணி நாயகியாக வலம் வருகிறார். சிறந்த உடற்பயிற்சி - உணவு கட்டுப்பாடு கடைபிடித்தால், அழகாக இருக்க முடியும் என கூறியுள்ள சமந்தா, காலையில் புரதசத்து பானம், முட்டை சாப்பிடுவதாகவும், மதிய உணவில் மீன் , மாமிசம் சேர்த்துக் கொள்வதாகவும் தனது உணவு பட்டியலை வெளியிட்டு உள்ளார். சருமம் ஆரோக்கியமாக இருக்க, அதிக அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று நடிகை சமந்தா, சக நடிகைகளுக்கும், ரசிகர்களுக்கும் அட்வைஸ் கொடுத் துள்ளார்.
Next Story