"தொடர்ந்து அவதூறு" என, பிரியா வாரியர் வேதனை
'ஒரு அடார் லவ்' படத்தில், கதாநாயகியாக நடித்த பிரியா வாரியர் மீது, தொடர்ந்து விமர்சனங்கள் வருகின்றன.
'ஒரு அடார் லவ்' படத்தில், கதாநாயகியாக நடித்த பிரியா வாரியர் மீது, தொடர்ந்து விமர்சனங்கள் வருகின்றன. படம் தோல்வி அடைந்ததற்கு அவரே காரணம் என்று குற்றம் சாட்டுகின்றனர். கண் சிமிட்டல் காட்சி பிரபலமானதால், பிரியாவுக்கு முக்கியத்துவம் அளிக்கும்படி தயாரிப்பாளர் வற்புறுத்தியதாக, இயக்குனர் உமர் லூலூ தெரிவித்தார். கதாநாயகியாக தேர்வு செய்த தம்மை ஓரம் கட்டிவிட்டு, பிரியா வாரியருக்கு முக்கியத்துவம் கொடுத்து விட்டதாக, நூரின் ஷெரிப் கூறினார். இதற்கு பதில் அளித்துள்ள பிரியா வாரியர், "தாம் உண்மையை பேச ஆரம்பித்தால் சிலர் பிரச்சினையில் சிக்குவார்கள் என்றும், அவர்களை போல் தாமும் இருக்க கூடாது என்று அமைதி காத்து வருவதாகவும், அவர்களை கர்மா கவனித்துக்கொள்ளும் என்றும், கூறியுள்ளார்.
Next Story