"கண்ணான கண்ணே..." பாடல் வெளியீடு

அஜித் நடித்த விஸ்வாசம் படத்தில் இடம்பெற்ற கண்ணான கண்ணே பாடலின் வீடியோவை, தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
கண்ணான கண்ணே... பாடல் வெளியீடு
x
அஜித் நடித்த விஸ்வாசம் படத்தில் இடம்பெற்ற கண்ணான கண்ணே பாடலின் வீடியோவை,  தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. கவிஞர் தாமரையின் எழுத்தில், இமான் இசையில் சித் ஸ்ரீராமில் மெல்லிய குரலில் ஒலித்த 'கண்ணாண கண்ணே' பாடல், மகள்களை பெற்ற அப்பாக்களின் மனதை உருகவைத்தது. தந்தையின் மீதான மகளின் பாசம் பொங்கும் வகையில் இருக்கும் இந்த பாடலை அனைத்து தரப்பினரும் பலமுறை கேட்டு நெகிழ்ந்தனர். தற்போது காட்சிகளுடன் வெளியிடப்பட்ட பாடலை, யூடியூபில் இதுவரை 6 லட்சத்து 22 ஆயிரம் பேர் பார்த்து ரசித்துள்ளனர். 1 லட்சம் பேர் சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளனர்.   

Next Story

மேலும் செய்திகள்