'ஒஸ்தி' நடிகைக்கு திருமணம்...
தமிழில் மயக்கம் என்ன, ஒஸ்தி போன்ற படங்களில் நடித்த நடிகை ரிச்சாவிற்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.
தமிழில் மயக்கம் என்ன, ஒஸ்தி போன்ற படங்களில் நடித்த நடிகை ரிச்சாவிற்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. எம்.பி.ஏ படிப்பதற்காக அமெரிக்காவிற்கு சென்ற ரிச்சா, தனது கல்லூரி நண்பர் ஒருவருடன் காதலில் விழுந்துள்ளார். இது தொடர்பாக தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தனக்கும் அமெரிக்காவைச் சேர்ந்த ஜோ என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். திருமண தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Next Story