மணிகர்ணிகா படத்தின் பாடல் வெளியிட்டு விழா...
மும்பையில் ராணி லட்சுமிபாயின் வாழ்க்கை வரலாற்று படமான "மணிகர்ணிகா"வின் இசை வெளியிட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது.
மும்பையில் ராணி லட்சுமிபாயின் வாழ்க்கை வரலாற்று படமான "மணிகர்ணிகா"வின் இசை வெளியிட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. சுதந்திர போராட்ட வீராங்கணையான ராணி லட்சுமிபாயின் வீர சாகசங்களை உலகிற்கு எடுத்துரைக்கும் விதமாக எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தில், ராணியாக கங்கானா ரனவாத் நடித்துள்ளார். இந்த படத்தின் மூலம் கங்கானா ரனவாத் இயக்குனராகவும் பிரவேசித்துள்ளார்.குடியரசு தினத்தையொட்டி, வரும் 25 ஆம் தேதி படம் வெளிவர இருக்கிறது. நடைபெற்ற இசை வெளியிட்டு விழாவில், பாடகர் சங்கர் மகாதேவன் கலந்து கொண்டு பாடினார்.
Next Story