ராதாரவிக்கு மலேசிய நாட்டில் வழங்கப்பட்ட 'டத்தோ பட்டம்' போலி - சின்மயி
நடிகர் ராதாரவிக்கு மலேசிய நாட்டில் வழங்கப்பட்ட 'டத்தோ பட்டம்' போலியானது என பாடகி சின்மயி புதிய குற்றச்சாட்டை எழுப்பத் துவங்கியிருக்கிறார்.
மீ டூ விவகாரத்தில் பரபரப்பாக பேசப்பட்ட சின்மயி இப்போது டத்தோ விவகாரத்தில் ராதாரவி மீது பாய்ச்சல் காட்டிக் கொண்டிருக்கிறார். இன்னொரு பக்கம் ராதாரவி வாங்கிய டத்தோ பட்டம் போலியானது அல்ல என கோடம்பாக்கத்திலும், மலேசியாவிலிருந்தும் குரல்கள் ஒலிக்கத் துவங்கியிருக்கின்றன.
நானும் ராதாரவியுடன் டத்தோ பட்டம் பெற்றேன் - மரி ஆண்டனி, மலேசிய பெண்
ஆனால் சின்மயி தரப்பில் இதை முற்றிலும் மறுக்கிறார்கள். மலேசியாவின் மெலாகா மாநில முதல்வரின் பொது விவகாரத்துறைக்கான சிறப்புச் செயலராக உள்ள பிரசாந்த் குமார் பிரகாசம் இதுவரை டத்தோ பட்டம் இந்தியாவில் ஷாருக்கானிற்கு மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருப்பதை சின்மயி ஆதாரமாகக் காட்டுகிறார்.
இன்னொரு பக்கம் ராதாரவிக்கு ஆதரவாக மலேசியாவின் ஒரு சுல்தானும் களம் இறங்கியுள்ளார். ஆனால் அந்த மலேசிய சுல்தானே போலியானவர் என சின்மயி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சின்மயி பொய் குற்றச்சாட்டுகளை கூறிவருகிறார் -ராஜேந்திரன், டப்பிங் யூனியன்
இந்நிலையில் டப்பிங் யூனியனின் துணைச் செயலாளர் ராஜேந்திரன் டத்தோ விருது பற்றிய புது விளக்கத்தைக் கொடுத்திருக்கிறார். டத்தோ பட்டம் விவகாரத்தில் சின்மயி நடிகர் ராதாரவியுடன் உச்சகட்ட மோதல் நடத்திக் கொண்டிருப்பதுதான் கோடம்பாக்கத்தின் லேட்டஸ்ட் பரபரப்பு.
Next Story