உலக அரங்கில் பரத நாட்டியத்தை அரங்கேற்றும் நடிகை...

உலக அரங்கில் பாராட்டுக்களைப் பெற்று வரும் இந்திய நடிகை ருக்மணி விஜயகுமார்.
உலக அரங்கில் பரத நாட்டியத்தை அரங்கேற்றும் நடிகை...
x
இயக்குநர் பாரதிராஜாவின் 'பொம்மலாட்டம்' படத்தில், காற்றில் பறந்து பறந்து பரதமும் பாலேவும் ஆடிய அந்தச் சுருள் முடிப் பெண் தான் இந்த ருக்மணி விஜயகுமார்... சமீபத்தில், நெதர்லாந்து நாட்டில் உள்ள, உலகப் புகழ் பெற்ற கார்சோ (karso) டான்ஸ் தியேட்டரில் நடனமாடி, அசத்தியுள்ளார். 'ஆனந்த தாண்டவம்' திரைப் படத்தில், 'கனாக் காண்கிறேன் கனாக் காண்கிறேன் கண்ணா' என்று பரதத்தில் அசத்தியிருப்பார். நடனத்தில் கவனம் செலுத்தி வரும் ருக்மணி, உலக அரங்கில் பரத நாட்டியத்தை அரங்கேற்றி அசத்தி வருகிறார். ஹைதராபாத்தில் வசித்து வரும் ருக்மணி, உலகம் முழுக்க நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவருகிறார். லண்டன், நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் பரத நாட்டிய பயிற்சி பட்டறையும் நடத்தி வருகிறார். கார்சோ டான்ஸ் தியேட்டரில், உலகின் தலைசிறந்த நடனமாடுபவர்கள் மட்டுமே நிகழ்ச்சி நடத்த முடியும். கடந்தாண்டு, ருக்மணி அங்கே நடனமாடினார். 




பரத நாட்டியத்தையும் பாலே டான்ஸையும் கலந்து, 'மாடர்ன் டான்ஸ்' என்று சொந்தமாக நடனம் அமைத்து, நடனமாடியிருந்தார். ருக்மணியின் திறமையைப் பார்த்து வியந்து, இந்த வருடமும் கார்சோ டான்ஸ் தியேட்டரில் நடனமாட அழைத்தனர். லண்டனில் பரதநாட்டிய நிகழ்ச்சி நடத்தச் சென்றிருந்த ருக்மணி, அக்டோபர் மூன்றாவது வாரம் நெதர்லாந்துக்குச் சென்று ஆடியதோடு, விருதையும் பெற்று வந்துள்ளார். யோகா, மாடலிங், நடிப்பு, நடனம், பரத நாட்டியம் என பன்முகத் திறமை கொண்டவர் ருக்மணி விஜயகுமார்... ஒடிசலான தேகம், துறு துறு கண்கள், சுருள் முடி, வசீகரச் சிரிப்புடன் வலம் வருகிறார். பொம்மலாட்டம்,  ஆனந்த தாண்டவம், கோச்சடையான், Bhajarangi, Shamitabh மற்றும் காற்று வெளியிடை என, சொற்ப படங்களில் மட்டுமே நடித்துள்ளார். இந்திய திரையுலகம் வாய்ப்பு தராதது நல்லது தான் போலிருக்கு... உலக அரங்கில் நட்சத்திரமாக, மின்னி வருகிறார் ருக்மணி...

Next Story

மேலும் செய்திகள்