ஏன் ராஜினாமா செய்தேன்...? - கே.பாக்யராஜ் விளக்கம்

சர்கார் படப் பிரச்சினை எதிரொலியாக, தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் பொறுப்பை ராஜினாமா செய்வதாக இயக்குனர் பாக்யராஜ் அறிவித்துள்ளார்.
ஏன் ராஜினாமா செய்தேன்...? - கே.பாக்யராஜ் விளக்கம்
x
சர்கார் படப் பிரச்சினை எதிரொலியாக, தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் பொறுப்பை ராஜினாமா செய்வதாக இயக்குனர் பாக்யராஜ் அறிவித்துள்ளார். இது தொடர்பாக, திரைப்பட எழுத்தாளர் சங்க உறுப்பினர்களுக்கு கடிதம் ஒன்றை அவர் எழுதியுள்ளார். அதில்,

* எழுத்தாளர் சங்கத் தலைவராக போட்டி இல்லாமல் தேர்ந்தெடுக்கப்பட்ட தான், மனசாட்சியுடன் நேர்மையாக செயல்பட்டு வந்ததாகவும், சர்கார் படப் பிரச்சினைக்கு முன்பு எல்லாம் நல்லபடியாக போய் கொண்டிருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

* சர்கார் படப்பிரச்சினையில், கதை திருடப்பட்டதாக புகார் தெரிவித்தவரின் பக்கம் உண்மை இருப்பதாக உணர்ந்த தான், சங்கத்தில் இருக்கும் முக்கிய உறுப்பினர்களுடன் கலந்து ஆலோசித்து அந்த பிரச்சினையை நியாயமாக முடித்ததாக குறிப்பிட்டுள்ளார்.

* ஆனால், அந்தப் பிரச்சினை மூலம், தான் பல அசவுகரியங்களை சந்தித்ததாகவும், தேர்தலில் போட்டியிடாமல், நேரடியாக பொறுப்புக்கு வந்ததால் தான் தனக்கு இந்த நிலைமை என்றும் பாக்யராஜ் தெரிவித்துள்ளார்.

* எனவே, திரைப்பட எழுத்தாளர் சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக குறிப்பிட்டுள்ள பாக்யராஜ், தேர்தலில் முறையாக போட்டியிட்டு, போதுமான ஆதரவுப் பெற்று மீண்டும் தலைவர் பொறுப்பை ஏற்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.

* மேலும், சங்கத்தின் நலன் கருதி, சர்கார் படப் பிரச்சினையில் தனக்கு நேர்ந்த அசவுகரியங்களை வெளியில் சொல்ல விரும்பவில்லை எனவும் பாக்யராஜ் கூறியுள்ளார்.

* சர்கார் படத்தின் இயக்குனர் முருகதாஸிடம்  பலமுறை கெஞ்சியும் அவர் உடன்படாததால், சர்கார் கதையை வெளியில் சொல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டதாகவும், அதற்காக பட தயாரிப்பாளரிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் பாக்யராஜ், தனது கடித்தில் தெரிவித்துள்ளார்.  


Next Story

மேலும் செய்திகள்