பரபரப்பை ஏற்படுத்திய சர்கார் டீசர் : தெலுங்கு பட சண்டைக் காட்சியின் காப்பியா?
சர்கார் படத்தின் டீசரில் வரும் ஒரு காட்சி தெலுங்கு படத்தின் காப்பியா என்பது குறித்த சர்ச்சை இணையதளங்களில் உலாவருகிறது...
சர்கார் பட டீசர் வெளியாகி உலக அளவில் சாதனை படைத்துள்ள நிலையில் அந்த டீசரில் உள்ள காட்சிகள் பற்றி பல்வேறு விதமான சர்ச்சைகள் உலா வரத் தொடங்கியுள்ளன.
குறிப்பாக விஜய் தோன்றும் சண்டைக் காட்சிகள் சர்ச்சையை கிளப்பியுள்ளன. வில்லன் நடிகரை வீழ்த்தி தோளில் தூக்கிய படி விஜய் போஸ் கொடுக்கும் காட்சி தான் அது...
ஆனால் இந்த காட்சி ஒன்றும் புதிதல்ல என்பது சினிமா ஆர்வலர்களின் கருத்து. தெலுங்கில் பிரபலமாக ஓடிய படம் ஒன்றில் அல்லு அர்ஜூன் அசத்தலாக நடித்த காட்சி தான் இது என்பது அவர்களின் வாதம்..
அதனை உறுதி செய்வது போல் அந்த காட்சிகளை இணையதளத்தில் உலவ விட்டிருக்கிறார்கள்..
திரைத்துறையில் இது ஒன்றும் சர்ச்சைக்குரியதும் அல்ல.. விமர்சிக்கும் அளவிற்கு உரிய விஷயமும் அல்ல என்பது விஜய் ரசிகர்களின் வாதம்... சமகாலத்தில் வரும் திரைப்படங்களில் இதுபோன்ற காட்சிகள் இருப்பது ஒன்றும் புதிதல்ல என்பதும் அவர்களின் கருத்து.. எது எப்படி இருப்பினும் சர்கார் டீசர் ஏற்படுத்திய பரபரப்புக்கு நிகராக அதில் உள்ள காட்சி காப்பியடிக்கப்பட்டது என்ற வாதமும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
Next Story