காலத்தால் வெல்ல முடியாத கவிஞர் கண்ணதாசனின் நினைவு தினம் இன்று..
1927-ம் ஆண்டு ஜூன் 24-ம் தேதி பிறந்த கண்ணதாசன், 55 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்திருந்தாலும், சாகாவரம் பெற்ற அவரது இலக்கியங்களில், அவரது ஆளுமையை காணலாம்.
1927-ம் ஆண்டு ஜூன் 24-ம் தேதி பிறந்த கண்ணதாசன், 55 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்திருந்தாலும், சாகாவரம் பெற்ற அவரது இலக்கியங்களில், அவரது ஆளுமையை காணலாம். நான்காயிரத்துக்கும் மேற்பட்ட கவிதைகள், ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்பட பாடல்கள், அற்புதமான தமிழ் நடையுடன் கூடிய நூல்கள், கட்டுரைகள், சிறு காப்பியங்கள் என எழுதியது கண்ணதாசனின் சாதனை. பத்திரிகையாளர், அரசியல்வாதி, திரைப்பட பாடலாசிரியர், கவிஞர், வசனகர்த்தா, எழுத்தாளர், நடிகர், படத் தயாரிப்பாளர் என பல அவதாரங்களை எடுத்தவர். நாத்திகராக இருந்தவர், காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள் கூறியதற்கு இணங்க 'அர்த்தமுள்ள இந்து மதம்' எனும் அற்புதமான படைப்பை வழங்கினார். எட்டாம் வகுப்பு வரை மட்டுமே பள்ளிப் படிப்பைப் படித்த கண்ணதாசன், தனது வாழ்க்கை அனுபவங்களில் இருந்து ஏராளமான படைப்புகளை தமிழுக்கு தந்திருக்கிறார்.
Next Story