#MeToo புயல் : திரைத்துறைக்கு 500 கோடி நஷ்டம்
தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்கள் பற்றி பெண்கள் நேரடியாக சமூக வலைதளங்களில் பகிரும் #Metoo புயல் இந்தியா முழுவதும் வீசி வருகிறது.
தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்கள் பற்றி பெண்கள் நேரடியாக சமூக வலைதளங்களில் பகிரும் #Metoo புயல் இந்தியா முழுவதும் வீசி வருகிறது. இந்த சுழலில் எஐபி ( AIB ) பந்தோம் (Phantom) போன்ற தயாரிப்பு நிறுவனங்கள் சிக்கியுள்ளன .இந்த இரு நிறுவனங்களும் hotstar, Amazon, Netflix உடன் பல கோடி மதிப்பிலான ஒப்பந்தங்களில் உள்ளன. இவை அனைத்தும் இப்போது கேள்விக்குறியாகியுள்ளன.
நகைச்சுவை நிகழ்ச்சி வழங்கும் AIB நிறுவனத்தின் ‘On Air with AIB’ சீசன் 3 என்ற நிகழ்ச்சி hotstar-ல் செப்டம்பர் 24 முதல் ஒளிபரப்பப்பட்டது. ஆனால் 7 பகுதிகளே ஒளிபரப்பான நிலையில் தற்போது பாலியல் புகார் காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது. 70 சதவீத நிகழ்ச்சி ஒளிபரப்பாகவில்லை. மேலும் AIB யின் 'Chintu Ka Birthday' மற்றும் ரஜத் கபூரின்'Kadakh’ படங்கள், மும்பை திரைப்பட விழாவிலிருந்து நீக்கப்பட்டுள்ளன.
குயின் திரைப்பட இயக்குனர் விகாஸ் பாலின் 100 கோடி ரூபாய் மதிப்பிலான 'Super 30' திரைப்படம், நானா படேகரின் 75 கோடி மதிப்பிலான Housefull 4, சுபாஷ் கபூரின் 100 கோடி மதிப்பிலான ‘Mogul’ திரைப்படங்களும், அவர்களின் பெயர்கள் #Metoo-வில் வெளிவந்ததால் பாதிக்கப்பட்டுள்ளன. தயாரிப்பாளர்கள் அவர்களின் திரைப்படங்களை காப்பாற்ற போராடி வருகின்றனர்.
திரைப்பட வர்த்தக ஆய்வாளர் அதுல் மோகன் கூறுகையில், இந்த திரைப்படங்களும் நிகழ்ச்சிகளும் நின்றதன் காரணமாக, பொழுது போக்கு மற்றும் சினிமா துறையில் ரூ.500 கோடி வரை நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது என்றார்.
Next Story