இணைய மீம்ஸ் இளைஞர்களின் சிரிப்பு கடவுள் வடிவேலுவின் பிறந்த நாள் இன்று...

காமெடி உலகில் முடிசூடா மன்னனாக வலம் வரும் நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் பிறந்தநாள் இன்று.
இணைய மீம்ஸ் இளைஞர்களின் சிரிப்பு கடவுள் வடிவேலுவின் பிறந்த நாள் இன்று...
x
சிந்திக்க தெரிந்த மனித இனத்துக்கு மட்டுமே சொந்தமான ஒரு உணர்வு சிரிப்பு. தமிழ் திரையுலகில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் தொடங்கி நாகேஷ், கவுண்டமணி, செந்தில் என தற்போதைய சூரி வரையிலும் ஏராளமான நகைச்சுவை நடிகர்கள் கோலோச்சி இருக்கின்றனர். அவர்களில் இன்றைய தலைமுறையின் செல்லப்பிள்ளை வடிவேலு. திரை ரசிகர்களுக்கு மட்டுமல்ல இணையதள மீம்ஸ் இளைஞர்களுக்கும் அவர் தான் சிரிப்பு கடவுள். அவரது வசனங்களே மீம்ஸ்களாகின்றன.



1991ம் ஆண்டில் 'என் ராசாவின் மனசிலே' படத்தின் மூலம் அறிமுகமான வடிவேலுவுக்கு முதல் படத்திலேயே பாடும் வாய்ப்பும் கிடைத்தது. கவுண்டமணி, செந்தில் கூட்டணி கோலோச்சிய அந்த சமயத்தில் சிறு சிறு வேடங்களில் தலைகாட்டிய வடிவேலு, 2000த்துக்கு பிறகு தமிழ் சினிமாவின் நகைச்சுவை ஏரியாவை மொத்தமாக எடுத்துக் கொண்டார் என்றே சொல்லலாம்.தனியாக மட்டுமல்லாமல் கதாநாயகர்களுடன் சேர்ந்தும் காமடியில் கலக்குவதில் வல்லவர் வடிவேலு. அதிலும் பார்த்திபனுடன் ஜோடி போட்டால் வெடிச் சிரிப்பு நிச்சயம்...



வின்னர், லண்டன், மருதமலை போன்ற சில படங்கள் வடிவேலுவின் நகைச்சுவை காட்சிகளுக்காகவே ஓடின என்பது நிச்சயம். நினைத்து பார்த்தால் கூட முகத்தில் சிரிப்பை வரவழைப்பது வடிவேலுவின் காமெடி...கந்தசாமி படத்தில் தண்ணீர் அடிக்கும்போது பிரபுவிடம் பேசும் வசனம் சீன்...10 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான இருபத்தி மூன்றாம் புலிகேசி படத்தில் அவர் அடிக்கும் லூட்டிகள், இன்றளவும் கிச்சு கிச்சு மூட்டும் தனி ரகம். நகைச்சுவை மட்டுமல்லாமல், குணச்சித்திர நடிப்பிலும் அசத்தியவர் வடிவேலு. அதற்கு தேவர் மகன் உதாரணம்...



மதுரையில் எளிய குடும்பத்தில் பிறந்து, கண்ணாடி அறுக்கும் கூலி தொழிலாளியாக பிழைப்பை தொடங்கி, தனது நடிப்பால் உலகம் முழுவதுக்கும் சிரிப்பு மருந்து அளித்த வைகைப்புயல் வடிவேலுவின் பிறந்த நாள் இன்று...  இந்த காமெடி நடிகரின் பிறந்த தினத்தில் தான் மன அழுத்தத்தை போக்க வலியுறுத்தும் சர்வதேச மன நல நாள் என்பதும் எவ்வளவு பொருத்தம்

Next Story

மேலும் செய்திகள்