ஓரினச் சேர்க்கை குற்றமல்ல என்ற தீர்ப்பிற்கு நடிகர் நடிகைகள் வரவேற்பு

இயற்கைக்கு முரணான பாலியல் உறவு தண்டனைக்குரிய குற்றமல்ல என்ற உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு நடிகர், நடிகைகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
ஓரினச் சேர்க்கை குற்றமல்ல என்ற தீர்ப்பிற்கு நடிகர் நடிகைகள் வரவேற்பு
x
நடிகை திரிஷா வரவேற்பு : 

ஒரின சேர்க்கை குற்றம் அல்ல என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு, நடிகை திரிஷா வரவேற்பு தெரிவித்துள்ளார். தமது டுவிட்டர் வலைப்பக்கத்தில் சம உரிமைக்கான வழியில் செல்ல முடியும் என குறிப்பிட்டுள்ளார். அரசியல் சட்ட ப்பிரிவு 377 வது பிரிவு ரத்து செய்யப்பட்டதை வரவேற்றுள்ள திரிஷா JaiHO என பதிவிட்டுள்ளார். 

வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு - குஷ்பு :



ஓரினச் சேர்க்கை குற்றமல்ல என உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பிற்கு காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் குஷ்பு வரவேற்பு தெரிவித்துள்ளார். வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு இது என கூறியுள்ள அவர் அவர்களின் உரிமை அவர்களுக்கு கிடைத்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

பாலிவுட் நடிகர்கள் வரவேற்பு : 



இயற்கைக்கு முரணான பாலியல் உறவு தண்டனைக்குரிய குற்றமல்ல என்ற உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு நடிகர், நடிகைகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். 



பாலிவுட் நடிகர்கள் அக்‌ஷய் குமார், ரன்வீர் சிங், நடிகை அனுஷ்கா சர்மா ஆகியோரும் இதனை வரவேற்றுள்ளனர்.  

Next Story

மேலும் செய்திகள்