ஒரே ஆண்டில் 42 கிலோ எடை குறைத்த இமான் - ரகசியம் என்ன?

இசையமைப்பாளர் இமான் ஒரே ஆண்டில் 42 கிலோ உடல் எடையை குறைத்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளார்.
ஒரே ஆண்டில் 42 கிலோ எடை குறைத்த இமான் - ரகசியம் என்ன?
x
இசையமைப்பாளர் இமான் ஒரே ஆண்டில் 42 கிலோ உடல் எடையை குறைத்துள்ளார். இது பற்றி அவர் தன்னுடைய ட்விட்டர்  பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

முயன்றால் முடியாதது எதுவும் இல்லை. இப்போது பல பேர் என்னிடம் இளைத்து விட்டீர்கள், உங்கள் பருமனை இழந்து விட்டீர்கள் என்கிறார்கள். அதற்கு பின் பல நாள் கடின உழைப்பும் அர்ப்பணிப்பும் உள்ளது நண்பர்களே! ஆரோக்கியமாக இருப்பது ஒரு நல்ல அனுபவம், அதை ஒவ்வோருவரும் அனுபவிக்க வேண்டும். சிறு வயது முதலே உடல் எடை கட்டுக்கோப்பாக  இருப்பதையே  நான் விரும்பினேன். ஆனால்  பள்ளி, இசை அமைத்தல் என காலம் வேகமாக கடந்ததால் என் உடல் எடை அதிகரித்தது. அதன் பின் முறையற்ற உணவு பழக்கத்துக்கு என் உடல் அடிமையானது. ஸ்டூடியோவில் பல மணி நேரம் அசைவற்று வேலை செய்தது என் எடையை இன்னும் பல மடங்கு உயர்த்தியது. இப்போது உடல் ஆரோக்கியம் மீது அக்கறை கொண்டு உடற்பயிற்சிக்கு நேரம் ஒதுக்கி, உணவு பழக்கத்தையும் மாற்றி ஒரு வருடத்தில் 42 கிலோ உடல் எடையை குறைத்துள்ளேன். 119 கிலோ எடை கொண்ட நான் இப்பொழுது 75 கிலோவாக மாறிவிட்டேன். இந்த மாற்றம் பற்றி பல  எண்ணிலடங்காத கேள்விகள் வந்தன அதை நான் தெளிவு படுத்த விரும்புகிறேன். இயற்கையான முறையிலே எடையை குறைத்தேன். எந்த செயற்கை முறையும் இல்லை நண்பர்களே! செயற்கை முறை எடை குறைப்பை தவிர்த்திடுங்கள். அதில் உடனே பலன் கிடைத்தாலும் இயற்கை முறையே சிறந்தது. என்னுடைய உணவு வல்லுநர் திருமதி அதுல்யா ராஜேஷ் , மற்றும் என்னை தொடர்ந்து கண்காணித்த உடற்பயிற்சி நிபுணர் ராஜேஷுக்கும் நன்றி. உடல் பருமனோ  மெலிவோ நான் இசையால் என்றும் உங்களுடையவனே! 
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார் .

Next Story

மேலும் செய்திகள்