விஸ்வரூபம் 2 - படத்துக்கு தடை கோரி வழக்கு : சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணை
நடிகர் கமல்ஹாசன் தயாரித்து நடித்துள்ள விஸ்வரூபம் 2 படத்திற்கு தடை கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது.
விஸ்வரூபம் 2 படத்தை வெளியிட தடை கோரி பிரமிட் சாய்மீரா நிறுவனம், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில்,2008ம் ஆண்டு மர்மயோகி என்ற திரைப்படத்தை தயாரிப்பதற்காக ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனத்திற்கும் தங்கள் நிறுவனத்துக்கும் இடையே ஒப்பப்தம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த படத்தின் தயாரிப்பு பணிகளுக்காக 6 கோடியே
90 லட்சம் ரூபாயும், கதை, திரைக்கதை, வசனம் எழுதி நடிப்பதற்காக கமல்ஹாசனுக்கு 4 கோடி ரூபாயும் வழங்கப்பட்டதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ள
நிலையில், விஸ்வரூபம் 2 படத்தை ஆகஸ்ட் 10ம் தேதி வெளியிட இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளதாகவும்,
மர்மயோகி படத்திற்கு கொடுத்த சம்பளத்தை கமல்ஹாசன் வட்டியுடன் திருப்பி கொடுக்காமல் விஸ்வரூபம் 2 படத்தை வெளியிட அனுமதித்தால்,தங்களுக்கு பெருத்த நஷ்டம் ஏற்படும் என பிரமிட் சாய்மீரா நிறுவனம் மனுவில் கூறியுள்ளது.
Next Story