ஸ்ரீரெட்டிக்கு வாய்ப்பு வழங்கத் தயார்-ராகவா லாரன்ஸ்
நடிப்பு திறமையை தன்னிடம் நிரூபித்தால் தனது படத்தில் வாய்ப்பு வழங்க தயார் என நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.
தெலுங்கு மற்றும் தமிழ் சினிமா பிரபலங்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்திய, நடிகை ஸ்ரீரெட்டி, நடிகர் ராகவா லாரன்ஸ் மீதும் புகார் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், ஸ்ரீரெட்டிக்கு வாய்ப்பு வழங்க தயாராக இருப்பதாகவும் ராகவா லாரன்ஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில், ஸ்ரீரெட்டி தனது நடிப்பு நிறமையை தன்னிடம் நிரூபித்தால், தனது படத்தில் வாய்ப்பு வழங்கி, அதற்கான முன்பணத்தை உடனே வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
Next Story