"மீடியா ஒன் நிறுவனத்தில் லதா ரஜினிகாந்த் பங்குதாரர் இல்லை"

லதா ரஜினிகாந்த் பங்குதாரரோ அல்லது இயக்குநராகவோ இல்லை என மீடியா ஒன் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
மீடியா ஒன் நிறுவனத்தில் லதா ரஜினிகாந்த் பங்குதாரர் இல்லை
x
கோச்சடையான் பட விவகாரத்தில் கிழமை நீதிமன்றத்தின் விசாரணையை எதிர்கொள்ள லதா ரஜினிகாந்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் மீடியா ஒன் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ad Bureau நிறுவனம் தெரிவித்து வரும் குற்றச்சாட்டுக்கு மீடியா ஒன் நிறுவனம் தான் பொறுப்பு என்றும், இது தொடர்பாக வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது என்றும் தெரிவித்துள்ளது. மீடியா ஒன் நிறுவனம் தொடர்பான இந்த பிரச்சனையில் லதா ரஜினிகாந்துக்கு எந்த தொடர்பும் இல்லை என்றும், அதனால் ad Bureau நிறுவனத்தின் ஆதாரமற்ற, அபாண்ட புகாரின் அடிப்படையில் லதா ரஜினிகாந்தை விமர்சிக்க வேண்டாம் என்றும் அந்த அறிக்கையில் மீடியா ஒன் நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்