வெடிக்கும் தேர்தல் பத்திரம் விவகாரம்..ஒருபுறம் சோதனை..! மறுபுறம் நன்கொடை..! இறங்கி அடிக்கும் ராகுல்
தேர்தல் பத்திரம் தொடர்பான தரவுகளை உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தேர்தல் ஆணையம் வியாழக்கிழமை வெளியிட்டது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ராகுல் காந்தி, தொழில் நிறுவனங்களிடமிருந்து மிரட்டி பணம் பறிக்கும் இந்த வழிமுறையை பிரதமர் மோடிதான் உருவாக்கினார் என்றார். தேர்தல் பத்திரம் என்ற பெயரில் மிரட்டி பணம் பறித்து, உலகின் மிகப்பெரிய ஊழலை பாஜக அரசு அரங்கேற்றியுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார். ஒருபுறம் சோதனை நடத்துவது, மறுபுறம் நன்கொடைகள் பெறுவது, ஒருபுறம் ஒப்பந்தங்களை வழங்குவது, மற்றொருபுறம் லஞ்சம் பெறுவது என இந்த குற்ற விளையாட்டின் விதி தெள்ளத் தெளிவாக தெரிகிறது என்றும் அவர் குற்றம் சாட்டினார். அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சிபிஐ போன்ற விசாரணை அமைப்புகள், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் வசூல் முகவர்களாக செயல்படுவதாகவும் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.