அதிமுக வேட்பாளர் கொடுத்த உறுதி | AIADMK
#AIADMK
அதிமுக வேட்பாளர் கொடுத்த உறுதி
தொழில் துறையினருக்கு தேவையான கட்டமைப்பை உருவாக்கவும், திட்டங்களை கொண்டுவரவும் நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன் என்று அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் உறுதி அளித்துள்ளார்.
கோவை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் சிங்கை ராமச்சந்திரன், தொழில் நிறுவனங்களின் தலைவர்களை சந்தித்து ஆதரவு கேட்டார். அப்போது, அதிமுக ஆட்சியில் கோவையின் கட்டமைப்புக்கு பல்வேறு திட்டங்களும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டதாக கூறினார்.
மேலும், தொழில் நிறுவனங்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் கொண்டு வர நாடாளுமன்றத்தில் தாம் குரல் கொடுப்பேன் என்றும், அதற்கு தொழில் நிறுவனத் தலைவர்களின் ஆதரவு இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
Next Story