மீட்டர் பறந்த பேப்பர் ராக்கெட்...பேப்பர் ராக்கெட்டில் கின்னஸ் சாதனை

x

ஸ்கூல் படிக்கும் போது... ஐஸ் க்ரீம் ஸ்டிக்க வச்சு ஆர்ட் அன்ட் கிரஃப்ட்லாம் பண்ணுவோம்... ராத்திரி முழுக்க உக்காந்து ஒட்டி செஞ்ச அந்த கிராஃப்ட்ட... மறுநாள் உடையாம ஸ்கூல்க்கு கொண்டு போறதே நமக்கு பெரிய சாதனை தான்... ஆனா இங்க ஒரு டீம் அந்த ஐஸ் குச்சிய வச்சு கின்னஸ் ரெக்கார்ட் பண்ணிருக்காங்க...

பிரேசில் நாட்ட சேந்த MANUAL DO MUNDO-ங்குற டீம்... இந்த உலகமே நம்மள திரும்பி பாக்குற மாதிரி எதாச்சும் சம்பவம் பண்ணனும் முடிவு பண்ணி... ஏகப்பட்ட ஐஸ் க்ரீம் குச்சிய அடுக்கி வச்சு 78 அடி உயரத்துல பிரமாண்ட டவர்ர உருவாக்கி... அதை உடையாம தூக்கி நிருத்தி கின்னஸ் சாதனை பண்ணிருக்காங்க...

நம்மளாம் பபுள் கம்ம வாங்குனா என்ன பண்னுவோம்... தின்னோமா... மென்னோமா... தூனு துப்புனமானு இருப்போம்... ஆனா அந்த பபுல் கம்ம வச்சு ஒட்டு மொத்த 90ஸ் கிட்ஸ்ஸே மிரண்டு போற அளவுக்கு... வினோத கின்னஸ் சாதனை பண்ணிருக்காரு அமெரிக்காவ சேந்த GARY DUSCHL...

பயங்கரமான பபுல்கம் பிரியரான இவரு... பபுல் கம் பேப்பர வச்சு 1965-ல சின்னதா ஒரு செயின் ஒன்னு செஞ்சு பாத்துருக்காரு... அப்டி பொழுது போக்கா ஆரம்பிச்சதோட விளைவு இன்னைக்கு 32,555.68 மீட்டர்-க்கு பபுல் கம் பேப்பர்ல செயின் செஞ்சு கின்னஸ் சாதனை பண்ணிருக்காரு...


Next Story

மேலும் செய்திகள்