இஸ்ரேல்-காசா போர் நிறுத்தம்? - நாசுக்காக சொன்ன அமெரிக்கா
காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் குறித்து அரபு நாடுகளின் உயர் மட்ட அதிகாரிகளுடன் கலந்தாலோசித்த அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கென் ஜோர்டானின் மன்னர் அப்துல்லா மற்றும் பட்டத்து இளவரசர் ஹுசைன் ஆகியோரை சந்தித்தார். ஆயிரக்கணக்கான பொதுமக்களின் மரணத்தை இஸ்ரேலின் தற்காப்பு என்ற கருத்தைக் கொண்டு நியாயப்படுத்த முடியாது என்று கூறி போர் நிறுத்தத்திற்கு ஜோர்டான் மற்றும் எகிப்தின் வெளியுறவு அமைச்சர்கள் பிளிங்கெனிடம் வலியுறுத்தினர். ஆனால் போர் நிறுத்தம் ஏற்பட்டால் ஹமாஸ் மீண்டும் இஸ்ரேலை தாக்குவதற்கு வாய்ப்புள்ளதாக பிளிங்கென் பதிலளித்தார்.
Next Story