ஆகஸ்ட் 1 - ஸ்பைடர் மேன் டே... மக்கள் நாயகனாக வலம் வரும் சூப்பர் ஹீரோ... ரசிக்க வைக்கும் சூப்பர் ஹீரோ வரலாறு...

x

அட டே ல இன்னைக்கு நாம பாக்க போற டே என்னனா... நம்ம தமிழ் சினிமாவுல உங்களுக்கு எந்த ஹீரோ பிடிக்கும்னு கேட்டா ரஜினி , கமல் , விஜய் , சூர்யானு இவங்கள்ல யாரையாவது ஒருத்தர நாம சொல்லிடுவோம்....

அதே மாதிரி ஹாலிவுட் சூப்பர் ஹீரோக்கள்ல உங்களுக்கு பிடிச்ச சூப்பர் ஹீரோ யாருனு கேட்டா பெரும்பாலான ஆட்கள் சொல்லுற பேரு நம்ம ஸ்பைடர் மேன்தான்..

இப்டி... உலகமே கொண்டாடுற மாமனிதருக்கு... வருசா வருசம்.. ஆகஸ்ட் 1 ஆம் தேதி ஸ்பைடர் மேன் டே அப்டினு ஒரு டேய உருவாக்கி... வேற லெவல்ல செலப்ரேட் பன்னிட்டு வராங்க நம்ம மக்கள்... அதனால இந்த மாசான டேய் எப்டி உருவாச்சுங்குற வரலாரையும் இந்த டே குள்ள இருக்க சுவாரஸ்யத்தையும் பாக்கலாம் வாங்க....

தி ஒன் அண்ட் ஒன்லி ஸ்பைடர் மேன்...

இன்னைக்கு.... நம்ம மனசு, பேக், சட்டை, ஜட்டினு எல்லாத்துளையும் நுழைஞ்ச ஸ்பைடர் மேன் கேரக்டர்... முதல் முதல்ல 1962 ஆம் வருசம் Amazing Fantasy அப்டிங்குற காமிக்ஸ் புக்ல... ஒரு வித்தியாசமான சூப்பர் ஹீரோ கேரக்ட்டரா தன்னோட வாழ்கை பயணத்தை தொடங்கியிருக்கு.... சில வருடங்கள்லயே ஸ்பைடர்மேன எல்லா கார்ட்டூன் ரசிகர்களுக்கும் பிடிச்சு போக... கொஞ்ச நாள்ல காட்டூன் மூவி... ஹாலிவுட் மூவி குள்ள நுழைஞ்சு... உலக சினிமா ரசிகர்களுக்கு பந்தி போட்டு விசுவல் ட்ரீட் வச்சுட்டாரு நம்ம ஸ்பைடர் மேன்... பெரிய ரசிகர் பட்டாளத்தையே உருவாக்குன நம்ம ஸ்பைடர் மேன்க்காக.. நாம ஏன் ஒரு டேய உருவாக்கி கொண்டாட கூடாதுனு நெனச்சிருக்காங்க அவரது ரசிகர்கள்... சரி... ஸ்பைடர் மேன் பொறந்த நாளிலேயே அந்த டேய கொண்டாடலாம்னு நெனச்சு அவங்க பிளான் பன்னப்போ தான் ஒரு புது பிரச்சினை உருவாகியிருக்கு...

அதாவது ஸ்பைடர் மேம் எப்போ பொறந்தாரு அப்படிங்கிறதுக்கு எந்த தீர்கமான ஆதாரமும் அவங்க கிட்ட இல்லை... இந்த விடை தெரியாத கேள்விக்கு, ஸ்பைடர் மேன உருவாக்குன அவரோட காமிக் அப்பா Stan Lee கிட்டேயே கேட்டிருக்காங்க.

ஸ்பைடர் மேன் முதன் முதலா காமிக்ஸ் குள்ள வந்து மக்களுக்கு தெரிய ஆரம்பிச்சத்து 1962 ஆகஸ்ட்டு 1 ஆம் தேதி தான்... அதனால அன்னைக்கே ஸ்பைடர் மேன் டே வ கொண்ட்டாடலாம்னு அறிவிச்சுட்டாராம்... இது தான் ஸ்பைடர் மேன் டேவோட வரலாறு...

சிலந்தினா பல பேருக்கு பயமும்... அருவருப்பும் தான் வரும்... அப்படிப்பட்ட சிலந்தியோட இமேஜையே மாத்த வச்ச கதாபாத்திரம் தான்... நம்ம ஸ்பைடர்மேன்... இருந்தாலும் இதுக்கான பெருமையெல்லாம் மார்வெல் காமிக்ஸ்க்கு தான் சேரும்

ஸ்பைடர்-மேன் அப்டிங்குற பேருக்கு நடுவுல... ஏன் ஒரு ஹைஃபன் இருக்குனு பாத்தா அதுக்கு ஒரு வரலாரு இருக்கு... அதாவது ஸ்பைடர்-மேன் கதா பாத்திரம் உருவாகுறதுக்கு முன்னாடியே மார்வெலோட போட்டி நிறுவனமான DC காமிக்ஸ் சூப்பர் மேனை உருவாக்கிட்டாங்க.... அதனாலேயே ஸ்டான்லீ.... ஸ்பைடர் மேன் அப்படீங்கற பேருக்கு நடுவுல ஒரு ஹைஃபனை கட்டாயம் போடனும்னு சொல்லிட்டாரு... ஏனா மக்கள் இந்த ஸ்பைடர் மேன்ன... சூப்பர் மேன்னு படிச்சிடுவாங்கனு நடுவுல ஒரு ஹைஃபன் போட வச்சிட்டாரு... !

ஆயிரம் சூப்பர் ஹீரோக்கள் இருந்தாலும்.... சின்ன குழந்தைகளோட பேவரைட் எப்பவுமே ஸ்பைடர் மேன்தான்... ஏன் யங்ஸ்டர்க்கு பிடிச்ச நாயகனும் இந்த பூச்சி மனிதன் தான்... ஏன்னா, மற்ற சூப்பர் ஹீரோக்கள் எல்லாம் முப்பது வயசுக்கு மேற்பட்டவங்க. உலகின் முதன் முதல் டீன் ஏஜ் சூப்பர் ஹீரோன்னா அது நம்ம ஸ்பைடர் மேன் மட்டும்தான். அந்த வகையில இவர் ஸ்பைடர் மேன் இல்ல... ஸ்பைடர் பாய்!


Next Story

மேலும் செய்திகள்