Today Headlines | காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (21-11-2023) | Morning Headlines | Thanthi TV

x

சென்னையில் தொடர் மழையால் புழல், சோழவரம் ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரிப்பு....

21 அடி உயரமுள்ள புழல் ஏரி, சுமார் 19 அடியை எட்டியது...

சென்னையில் கனமழை காரணமாக பட்டாளம் பகுதியில் கோயில் மற்றும் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது...

மின் மோட்டார் உதவியுடன் வெள்ள நீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் தீவிரம்...சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பகல் 1 மணி வரை இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும்...

சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்...

தமிழ்நாட்டில் நாளையும், நாளை மறுநாளும் மிக கனமழை பெய்யும்...

ஆரஞ்சு நிற எச்சரிக்கையை அறிவித்தது, இந்திய வானிலை ஆய்வு மையம்...


Next Story

மேலும் செய்திகள்