Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (20.12.2023) | 1 PM Headlines | Thanthi TV
நெல்லை சந்திப்பு பகுதிகளில் 4வது நாளாக முழங்கால் அளவுக்கு வெள்ள நீர் தேக்கம்..
சிந்து பூந்துறை, கைலாசபுரம், மீனாட்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் அவதி...
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டத்தில் மத்திய குழுவினர் நேரில் ஆய்வு...
ஸ்டேட் பேங்க் காலனி, முத்தம்மாள் காலனி உள்ளிட்ட இடங்களுக்கு படகுகளில் சென்றனர்...தென் மாவட்ட வெள்ள மீட்பு பணிகள் குறித்து, சென்னை எழிலகத்தில் உள்ள அவசரகால செயல்பாட்டு ஆய்வு மையத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு...
4 மாவட்டங்களுக்கான சிறப்பு அதிகாரிகளுடன் காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார்...தமிழகத்தில் வருகிற 26ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்...
சென்னையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் எனவும் அறிக்கை...
Next Story