நாட்டையே பரபரப்பாக்கிய சென்னை ரயில் விபத்து.. செப். 20ம் தேதியே சதி திட்டமா?

x

#chennaitrain #trainaccidentnews

கவரப்பேட்டை ரயில் விபத்து சிக்னல் கோளாறால் ஏற்படவில்லை என, முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது.

திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டையில் பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில், சரக்கு ரயில் மீது மோதிய விபத்தில் 19 பேர் காயம் அடைந்தனர். இதுதொடர்பாக ரயில்வே துறை மற்றும் ரயில்வே காவல்துறை விசாரணை நடத்தி வரும் நிலையில், தற்போது என்.ஐ.ஏ.வும் விசாரணை களத்தில் இறங்கி உள்ளது. ஏற்கனவே 13 ரயில்வே ஊழியர்களுக்கு சென்னை கோட்ட ரயில்வே மேலாளர் தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டது. இந்நிலையில் லோக்கோ பைலட், உதவி லோக்கோ பைலட், கவரப்பேட்டை ஸ்டேஷன் மாஸ்டர் ஆகிய 3 பேரிடம் என்.ஐ.ஏ. தீவிர விசாரணை நடத்தியுள்ளது. இந்நிலையில் கவரப்பேட்டையில் நிகழ்ந்த ரயில் விபத்து, சிக்னல் கோளாறால் ஏற்படவில்லை என, முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கவரப்பேட்டை அருகே ரயில்கள் மோதிய விவகாரத்தில், ரயிலை கவிழ்க்க சதித்திட்டம் தீட்டப்பட்டதா என, என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். முன்னதாக செப்டம்பர் 20-ஆம் தேதி பொன்னேரி - அனுப்பம்பட்டு இடையே தண்டவாளத்தில் 13 நட்டுகள், 6 போல்ட்டுகள் காணாமல் போனதாகவும், 4 இடங்களில் பாதை மாற்றும் சிக்னல் இணைப்பு கருவியின் போல்ட்டுகள், நட்டுகள் கழற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது. முந்தைய சம்பவங்களுடன் ஒத்துப்போவதால் நாச வேலையாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்