"பூர்வீ க இடத்தையே கொடுத்தோம்! யார் சொல்வதை நாங்கள் கேட்க வேண்டும்?" - மன உளைச்சலில் பேசும் மக்கள்

x

38 ஆண்டுகளுக்கு முன்பு, கும்பகோணம் அருகே தாராசுரத்தில், ஐராவதீஸ்வரர் கோவில் பகுதியை ஒட்டி, ஏராளமான கூலித்தொழிலாளிகள் வசித்து வந்தனர். கோயிலுக்கு இடம் வேண்டும் என்பதால், இவர்களை வேறு இடத்திற்கு மாறுமாறு, தொல்லியல் துறை கோரிக்கை வைத்தது. மேலும், அவர்களுக்கு மாற்று இடம் வழங்கி, இழப்பீடு தொகையும், தந்தது. அந்த மாற்று இடத்தில் தற்போது, 40 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த மாற்று இடம் அறநிலையத்துறைக்கு சொந்தமானது என்றும், இடத்திற்கான வாடகையை தரவேண்டும் என்றும் அதிகாரிகள் நோட்டீஸ் கொடுத்துள்ளனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான 40 குடும்பத்தினர், ஆட்சியர், கோட்டாட்சியர், தொல்லியல் துறை அலுவலகங்களில் மனு கொடுத்து வருகின்றனர்


Next Story

மேலும் செய்திகள்