சாவு வீட்டில் நடந்த களேபரம்.. துண்டு துண்டாக வீசப்பட்ட இளைஞரின் உடல் - நடுங்கும் திக் வாக்குமூலம்

x

முன்விரோதம் காரணமாக அடித்து கொலை செய்யப்பட்டவரின் உடலைத் துண்டு துண்டாக வெட்டி வீசியவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே திருவக்கரை அருகே உள்ள அரசு கல்குவாரியில் கடந்த வாரத்தில் கை கால்கள் வெட்டப்பட்ட நிலையில் கிடந்த ஆண் சடலத்தைக் கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். முதற்கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் சரவணப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ராஜதுரை எனத் தெரியவந்து. மேலும் அதே பகுதியைச் சேர்ந்த உதயா என்பவருக்கும் ராஜதுரைக்கும் துக்க நிகழ்ச்சியில் ஏற்பட்ட தகராறினால் முன் விரோதம் இருந்துள்ளது. இதனை ராஜதுரையை மது அருந்த அழைத்துச் சென்ற உதயா நண்பர்களுடன் சேர்ந்து கட்டையால் அடித்து கொலை செய்து உடலைக் கரும்பு தோட்டத்தில் பதுக்கி வைத்துள்ளனர். பின்னர் உடல் அழுகியதால் அவற்றைத் துண்டு துண்டாக வெட்டி கல்குவாரியில் வீசியதாக வாக்குமூலம் அளித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து உதயா மற்றும் அவரது நண்பர்கள் மோகன் ராஜ் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து கல்குவாரியில் வீசப்பட்ட உடல் பாகங்களைத் தீயணைப்பு படை வீரர்கள் ஸ்குபா டைவிங் செய்து நீண்ட நேரமாகத் தேடி மீட்டனர்


Next Story

மேலும் செய்திகள்