பக்தர்களிடம் பேரம் பேசும் இடைத்தரகர்கள்.. பரபரப்பு
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்களிடம், இடைத்தரகர்கள் பேரம் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. சமயபுரம் கோவிலில் பொது மற்றும் கட்டண தரிசனம் வழியாக பக்தர்கள் செல்வது வழக்கம். கூட்டம் அதிகமாக உள்ள நாட்களில், பக்தர்களை குறிவைத்து பணம் பெறும் இடைத்தரகர்கள், குறுக்கு வழியாக அவர்களை சாமி தரிசனத்திற்கு அழைத்து செல்கின்றனர். இந்நிலையில், செங்கல்பட்டை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் சிலரிடம், சாமி தரிசனத்திற்கு அழைத்து செல்ல நபருக்கு 200 ரூபாய் கேட்டு இடைத்தரகர்கள் பேரம் பேசிய காட்சி வெளியாகியுள்ளது.
Next Story