சூறாவளி காற்றுடன் பெய்த கனமழை
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று பரவலாக மழை பெய்தது.ஈரோடு மாவட்டம் பவானி, அந்தியூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் சூறாவளி காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. மேலும், பட்டணம், வடுகம், புதுப்பட்டி, நாமகிரிபேட்டை மற்றும் பகுதிகளில் பெய்த இந்த மழையால். நீர்நிலைகள் நிரம்பின. இந்த திடீர் மழையில் சிறுவர்கள் நனைந்து விளையாடினர். நீலகிரி மாவட்டம் ஊட்டியில், கோத்தகிரி சாலை, அரசு தாவரவியல் பூங்கா, குன்னூர் சாலை, படகு இல்லம் ஆகிய பகுதிகளிலும் சுமார் அரை மணிநேரம் மழை பெய்தது. இதனால் சுற்றுலா பயணிகள் சிரமத்துக்கு உள்ளாகினர்.
கோவை மாநகரின் புறநகர் பகுதிகளான கவுண்டம்பாளையம், இடையர்பாளையம், சாய் பாபா காலனி, கோவில்மேடு, வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளிலும் மிதமான மழை பெய்தது. இதனால், வெப்பம் குறைந்து குளிர்ச்சியான சூழல் உருவானதால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.