ஒரே நாளில் மாற்றம்.. தி.மலை SPயின் அதிரடி முடிவு

x

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரே நாளில் 60 போலீசாரை பணியிட மாற்றம் செய்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.

இதில் உதவி ஆய்வாளர்கள், சிறப்பு உதவி ஆய்வாளர்கள், ஏட்டுகள் என 38 போலீசார் ஏற்கனவே பணியிட மாற்றம் கோரி இருந்தனர். போளூர், செங்கம், செய்யாறு மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் பணியாற்றிய 6 போலீசார், சட்டம் ஒழுங்கு மற்றும் போக்குவரத்து பிரிவுக்கும், பல காவல் நிலையங்களில் பணியாற்றிய 16 போலீசார், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவுக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

கள்ளக்குறிச்சியில் கள்ள சாராய இறப்பையடுத்து திருவண்ணாமலை மாவட்டத்தில் 60 போலீசார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்