கார்த்திகை தீபத்திருவிழா.. அண்ணாமலையார் கோவில் வர்ணம் பூசும் பணி தீவிரம்! | Tiruvannamalai
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா வரும் 4-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெற உள்ளது. இதையொட்டி நாள்தோறும் பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடைபெற உள்ளது. 6-ம் நாள் திருவிழாவில் பஞ்ச மூர்த்திகள் வீதி உலா உற்சவத்திற்கு முன்னதாக 63 நாயன்மார்கள் வீதி உலா நடைபெறும்.
இதையொட்டி 63 நாயன்மார்கள் அமர்ந்து வரக்கூடிய விமானத்திற்கு வர்ணம் பூசும் பணியில் கோயில் பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்
Next Story