சென்னையில் இருந்து கிளம்பிய ஆம்னி பஸ்..நடுவழியில் கழன்று ஓடிய டயர் - அலறிய 40 பயணிகளின் நிலை?
திருப்பத்தூர் மாவட்டம், பங்களாமேடு பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்த தனியார் ஆம்னி பேருந்தில் இருந்து சக்கரம் கழன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையில் இருந்து பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் ஆம்னி பேருந்தில் சுமார் 40 பேர் பயணித்த நிலையில், பங்களாமேடு பகுதியில் பேருந்து சென்ற போது, அதன் முன்புற சக்கரம் கழன்றது. எனினும், பேருந்து ஓட்டுநர் அரவிந்தன் சாமர்த்தியமாக செயல்பட்டு பேருந்தை சாலையோரம் நிறுத்தியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. பின்னார், சக்கரத்தை சீரமைத்து பேருந்து இயக்கப்பட்டது.
Next Story