முதியவரின் ஆசைக்கு இணங்க வற்புறுத்தல்.. மாமியாரே செய்த கேவலம் - திருப்பூரில் அதிர்ச்சி | Thiruppur
திருப்பூர் மாவட்டம் உடுமலையை சேர்ந்த உதயகுமாருக்கும், கொடைக்கானலை சேர்ந்த இளம்பெண்ணுக்கும் கடந்த ஆகஸ்ட் 30-ல் திருமணம் நடைபெற்றுள்ளது. இதனைத்தொடர்ந்து, உதயகுமாரின் இல்லத்திற்கு வந்து சென்ற செல்வந்தர் ஒருவருடன் பழகும்படி இளம்பெண்ணை அவரது மாமியார் அறிவுறுத்தியதாக தெரிகிறது. தொடர்ந்து, தனது ஆசைக்கு இணங்கினால் நிலம், பணம் தருவதாக முதியவர் கூறியதாகவும், இதனால் அங்கிருந்து தப்பிய இளம்பெண், கொடைக்கானல் போலீசில் புகாரளித்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் எந்த நடவடிக்கையும் அங்கு எடுக்காததால், உடுமலை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் இளம்பெண் புகாரளித்துள்ளார். இதனையடுத்து, முதியவர் உள்ளிட்ட 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்த நிலையில், தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டுமென இளம்பெண் கோரிக்கை விடுத்துள்ளார்.
Next Story