தேனியை சுற்றிவந்த போலி டாக்டர்.. பறந்த உத்தரவு..! போலீஸ் அதிரடி | Theni
தேனியில் எம்.பி.பி.எஸ். படிக்காமல் கிளினிக் நடத்தி, மருத்துவம் பார்த்த போலி மருத்துவரை போலீசார் கைது செய்தனர். மாவட்ட ஆட்சியர் உத்தரவின்பேரில், மாவட்ட மருத்துவத்துறை இணை இயக்குனர் மற்றும் ஊரக நலப் பணியாளர்கள் இணைந்து கிளினிக்களில் சோதனை மேற்கொண்டனர்.இதில், பெரியகுளம் அருகே, தாமரைக்குளம் பேரூராட்சிக்கு உட்பட்ட தாசில்தார் நகர் பகுதியில், முத்துகிருஷ்ணன் என்ற 60 வயது முதியவர், எம்.பி.பி.எஸ் மருத்துவ சான்றிதழ் பெறாமல் கிளினிக் நடத்தி வந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து கிளினிக்கில் இருந்து மருந்து, மாத்திரைகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் கைப்பற்றப்பட்டன. பின்னர் முத்துகிருஷ்ணனை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Next Story