"வந்தே பாரத் ரயில்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்" - தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங்

x

சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னை பெரம்பூர் ரயில்வே மைதானத்தில், தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் தேசியக் கொடி ஏற்றினார்.

பின்னர் உரையாற்றிய அவர், கடந்த நிதியாண்டில் ரயில் சேவை மூலம் 11 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

தெற்கு ரயில்வே சார்பில் வந்தே பாரத் ரயில்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

காரைக்கால் - பேரளம், சின்னசேலம் - கள்ளக்குறிச்சி, வேளச்சேரி - புனித தோமையார் மலை, கடற்கரை - எழும்பூர் 4வது வழித்தடம் அமைக்கும் பணி இந்த நிதியாண்டில் முடிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

நாகர்கோவில் - இரணியல் - கன்னியாகுமரி, ஆரல்வாய்மொழி - நாகர்கோவில், நெல்லை - மேலப்பாளையம் வழிதடங்களை இரட்டை பாதை வழித்தடமாக மேம்படுத்தும் பணிகளை முடிப்பதுடன், மதுரை - போடிநாயக்கனூர் மின்சார பாதையாக மாற்றப்படும் என்றும் ஆர்.என்.சிங் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்