#JUSTIN | கடல் அலையில் சிக்கி பலியான 2குழந்தைகள்..திருப்பூர் பல்லடத்தை சேர்ந்தவர்களுக்கு நேர்ந்த கதி

x

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்த பிரபாகர்-எஸ்தர் என்ற தம்பதியர் கன்னியாகுமரி மாவட்டம் புத்தன்துறை பகுதியில் உள்ள சுபா என்பவரின் இல்ல சுப நிகழ்ச்சிக்காக கன்னியாகுமரி புத்தன் துறைக்கு சென்றிருந்தனர், அவர்களுடன் அவர்களது ஆறு வயது பெண் குழந்தை எமி, ஐந்து வயதை ஆண் குழந்தை யூவ்தா ஆகிய இரண்டு குழந்தைகளையும் அழைத்து வந்தனர் ,இந்நிலையில் நேற்று சுப நிகழ்ச்சி நடந்து முடிந்த நிலையில் இன்று காலை புத்தன்துறை கடற்கரை பகுதியில் இரு குழந்தைகளும் விளையாடிக் கொண்டிருந்தது அந்த வேலையில் திடீர் கடல் அலையில் அந்த இரு குழந்தைகளும் சிக்கி இழுத்துச் செல்லப்பட்டு மூச்சு திணறினர், உடனே அக்கம் பக்கத்தில் மீட்டு அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்,ஆனால் இரு குழந்தைகளும் ஏற்கனவே இறந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்,மேலும் இரு குழந்தைகளின் உடலை உடல்கூறு ஆய்வுக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுள்ளனர், இதுகுறித்து சுசீந்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர், இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்